India
“நெட்டி முறிக்கும் பழக்கமுடையவரா நீங்கள்..?” - அப்போ இது நிச்சயம் உங்களுக்கானது தான்!
நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும்போது ஒருவிதமான நிவாரணம் கிடைப்பதுபோல் தோன்றும். மேலும் அந்த சத்தத்தைக் கேட்கும் போதும், அடுத்தடுத்தும் இதேபோன்று கேட்குமோ என நினைத்து நாம் பத்து விரல்களிலும் நெட்டி முறிப்போம்.
அதேபோல், கழுத்து இடுப்பு என்று அனைத்து மூட்டுகள் இணையும் பகுதிகளிலும் நாம் நெட்டி முறிப்போம். இது நல்லதா? கெட்டதா என்று நமக்கு தெரியாது. ஆனால் இந்தப் பழக்கம் நம்மோடு ஒட்டிவிட்ட ஒன்றாகிவிட்டது.
இப்படி நாம் அடிக்கடி செய்வதால் எலும்புகளில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து எலும்பு மருத்துவர் ஆசிக் அமீன் கூறியது வருமாறு: நமது விரல் எலும்புகளின் இணைப்பு பகுதிக்கு இடையில் சைனோவியல் என்ற திரவம் சுரக்கும். இதுதான் மூட்டு எலும்புகள் உரசாமல் இருக்க எண்ணெய்போல் செயல்படுகிறது.
நாம் நீண்ட நேரம் அசையாமலிருக்கும்போது சைனோவியல் திரவம் எலும்புகளுக்கு இடையே அதிகமாகச் சேர்ந்துவிடும். அப்போது நெட்டி முறித்தால் முழங்கால் வீக்கம், தசைநார் பாதிப்பு போன்றவை ஏற்படும். மேலும் நெட்டி முறிக்கும்போது எலும்புகள் இணைப்பு விரிவடைவதால்தான் சொடுக்கு சத்தம் கேட்கிறது.
இந்த சத்தத்தால்தான் நாம் மீண்டும் மீண்டும் நெட்டி முறிக்கிறோம். இந்த பழக்கத்தில் இருந்து விடவேண்டும் என்றால், அப்பகுதிகளை அழுத்தம் நிறைந்த வேலைகளுக்கு அவ்வப்போது உட்படுத்துவது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!