India
பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு.. 3 பேர் பலி - 20 பேர் காயம் : போலிஸ் தீவிர விசாரணை!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கீழமை நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்ற கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் இன்று பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தபோது நீதிமன்றம் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்துள்ளது. இதனால் 20க்கும் மேற்பட்டோர் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்துள்ளனர். மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலிஸார் முழுமையாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
நாக்கில் நாராசம்.. கெட்டவர்.. இழிபிறவிகள் - சி.வி.சண்முகம் பேச்சுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!