India
“ஒரேநாளில் ரூ.763 கோடி அந்நிய மூலதனம் வெளியேற்றம்” : மோடி ஆட்சியில் பின்னடைவில் இந்திய பங்குச் சந்தைகள்!
மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட பாதிப்பு, இந்திய பங்குச்சந்தையிலும் பெரிதாக எதிரொலித்து வருகிறது. இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த சில வாரங்களாகவே அடி வாங்கி வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு போகிறதே தவிர, ஓரிடத்தில் நின்றபாடில்லை.
அந்த வகையில், வெள்ளிக்கிழமையன்றும் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டுமே பலத்த அடி வாங்கியுள்ளன. இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த சில வாரங்களாகவே அடி வாங்கி வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு போகிறதே தவிர, ஓரிடத்தில் நின்றபாடில்லை.
அந்த வகையில், வெள்ளிக்கிழமையன்றும் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டுமே பலத்த அடி வாங்கியுள்ளன. இந்நிலையில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென் செக்ஸ் செவ்வாயன்று 166 புள்ளிகள் சரிந்த நிலையில், புதனன்று மேலும் 330 புள்ளிகள் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இதேபோல தேசியப் பங்குச் சந்தைக் குறியீடான நிப்டியும் 103 புள்ளிகள் அளவிற்கு சரிந்துள்ளது.
தொடக்கத்தில் சென்செக்ஸ் 54.52 புள்ளிகள் அதிகரித்து, 58,171.61 புள்ளிகளாகவும், நிப்டி 9.60 புள்ளிகள் அதிகரித்து, 17,334 புள்ளிகளாகவும் காணப்பட்டது. 1461 பங்குகள் ஏற்றத்திலும், 524 பங்குகள் சரிவிலும், 90 பங்கு கள் மாற்றமில்லாமலும் காணப்பட்டன.
ஆனால், அதன்பிறகு பங்குச் சந்தைகள் அடிவாங்கின. நிப்டி குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி, கோடக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, லார்சன், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் லாபமீட்டிய நிலையில், பஜாஜ் பைனான்ஸ், டி.வி.ஸ் லேப், பஜாஜ் பின்செர்வ், அதானி போர்ட்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் இழப்பைச் சந்தித்தன.
சென்செக்சில் என்.டி.பி.சி, கோடக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, எம்&எம், பஜாஜ் ஆட்டோ உள் ளிட்டவை ஏற்றத்தையும், பஜாஜ் பைனான்ஸ், டி.வி.ஸ் லேப், பஜாஜ் பின்செர்வ், இன்போசிஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் இழப்பையும் சந்தித்தன.
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அறிவிப்புக்காக உலகளாவிய அளவில் முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர். பெடரல் வங்கி நிச்சயமாக வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்ப்பதால், அவர்கள் ஊசலாட்டத்தில் உள்ளனர்.
இதுவே இந்திய பங்குச் சந்தைகளின் தடுமாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஒமைக்ரான் அச்சமும் முக்கியக் காரணியாக பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக, டிசம்பர் 14 அன்று மட்டும் 763.18 கோடி ரூபாய் அளவிற்கான அந்நிய முதலீடுகள் இந்திய பங்குச் சந்தைகளை விட்டு வெளியேறியுள்ளன.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!