India
“தலை இல்லாமல் நிர்வாணமாகக் கிடந்த இளம்பெண்” : லாட்ஜில் நடந்த கொடூர கொலை - மும்பை போலிஸார் தீவிர விசாரணை!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள மாதேரன் மலைப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு பூனம் பால் (30) என்ற பெண் தனது நண்பர்களுடன் வந்து தங்கியிருந்திருக்கிறார். இந்நிலையில் மறுநாள் காலை வெகுநேரமாகியும் பூனம் மற்றும் அவரது நண்பர்கள் வெளியே வராத நிலையில், அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் பூனம் அறையை சுத்தம் செய்யச் சென்றுள்ளார்.
அப்போது அறையில் பூனம் தலை இல்லாமல் நிர்வாணமாக இறந்துகிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த முதற்கட்ட தகவல் குறித்து போலிஸார் ஒருவர் கூறுகையில், இறந்த பெண்ணுடன் இரண்டு ஆண்கள் முகக்கவசம் அணிந்து வந்ததால், அவர்களை அடையாளம் காணமுடியவில்லை. இருப்பினும் பெண்ணின் அடையாளத்தை மறைக்கவே பெண் தலையையும், அவரின் உடையையும் கையோடு எடுத்துச் சென்றுள்ளனர்.
விடுதியில் தங்குவதற்கு எந்தவொரு அடையாள அட்டையும் கொடுக்காததால், பெண் குறித்து முழுமையான தகவல் போலிஸாருக்கு கிடைக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடந்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!