India
இணையத்தில் உலாவும் 600 போலி கடன் வழங்கும் செயலிகள்.. சிக்கினால் ஆபத்து : RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில், இணையதளங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் கடன் செயலிகள் குறித்து ரிசர்வ் வங்கி ஜனவரி 13ஆம் தேதி குழு ஒன்று அமைத்து அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளது. இதில், சட்ட விரோதமாக இணையதளங்களில் 600க்கும் மேற்பட்ட கடன் வழங்கும் செயலிகள் இருப்பாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்துள்ளது.
மேலும், ஜனவரி 2021 முதல் பிப்ரவரி 28 வரை 80க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன் ஸ்டோர்களில் 1100 கடன் வழங்கும் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சட்ட விரோதமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனங்கள் கடனை வசூலிப்பதில் கொடூரமான முறையில் நடந்து கொள்கின்றன. கடனாளிகளின் செல்போன் விவரங்கள், புகைப்படங்கள், முக்கிய விவரங்களைத் திருடி அவர்களை மிரட்டுகின்றன.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை இணையதள கடன் மோசடிகள் குறித்து 2562 புகார்கள் வந்துள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, ஹரியானா, ஆந்திரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்தே அதிக அளவிலான புகார்கள் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதையடுத்து கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து முழுமையாக ஆராய்ந்த பிறகு, அவர்களின் அலுவலகத்திற்கே நேரடியாகச் சென்று மட்டுமே கடன் வாங்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.
Also Read
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!
-
“மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்கள்...” : பாஜகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் !
-
சிவகங்கையில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!