India

வாட்ஸ்ஆப்பில் முகம் தெரியாத பெண்ணிடமிருந்து வந்த ‘மெசேஜ்’.. 5 லட்சம் ரூபாய் பறிபோன சம்பவம்: நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரம் கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவருக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாட்ஸ் ஆப்பில் 'குட் மார்னிங்' என்று மெசேஜ் வந்துள்ளது. இதை ஒரு பெண் அனுப்பியுள்ளார் என நினைத்து அவரும் தொடர்ந்து வாட்ஸ் ஆப்பில் உரையாடி வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 8ம் தேதி அந்த பெண் தனது இருப்பிடத்தை அவருக்கு அனுப்பியுள்ளார். பின்னர், அந்த நபர் பெண் அனுப்பிய முகவரிக்குச் சென்றுள்ளார். அப்போது விடுதி அறையில் மூன்று ஆண்கள் இருந்துள்ளனர். இதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்த மூன்று பேரும் நாங்கள் போலிஸ் அதிகாரிகள் என கூறி அவரிடமிருந்த கிரெடிட் கார்டு, பர்ஸ் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டனர். பிறகு அவரை அந்த அறையில் வைத்துப் பூட்டிவிட்டு மூன்று பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் சிறிது நேரத்திலேயே அவரது வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 5.91 லட்சம் வரை எடுத்துள்ளனர். இதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்துப் பாதிக்கப்பட்ட நபர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “மொபைல் சாட்டிங் பழக்கத்திற்காக வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்” : கோவாவில் கண்டுபிடித்த போலிஸ்!