India
மசினகுடி டு மைசூர்: ’கூண்டுக்குள் கம்பீர நடை’ - எப்படி இருக்கிறது T23 புலி?
நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் கூடலூர் பகுதிகளில் 4 மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அடித்துக்கொன்ற டி23 புலி கடந்த மாதம் 15ஆம் தேதி உயிருடன் மசினகுடி வனப்பகுதியில் பிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் முதல் முறையாக உயிருடன் பிடிக்கப்பட்ட இந்த புலியின் உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் புலிக்கு மைசூர் வன உயிரின பூங்கா மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புலிக்கு தொடர் சிகிச்சையால் முன்னங்கால் வீக்கம் குறைந்து வருவதாகவும், இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து வருவதாக வன கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது T23 புலி ஆரோக்கியமாக உள்ளதாக ஒரு புதிய வீடியோவை பூங்கா நிர்வாகப் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் புலி நல்ல முறையில் நடமாடி ஓய்வெடுக்க கூண்டிற்குள் கம்பீரமாக நடந்து வந்து வைக்கோல் மெத்தையில் படுக்கும் காட்சியை வெளிட்டுள்ளது. தற்போது புலி நல்ல நிலையில் உள்ளதாகவும் அதற்கு தொடர்ந்து உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கி வருவதாகவும் மைசூர் வன உயிரின பூங்கா மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!