India
“ஆள்மாறாட்டம் செய்து 25 பேரை தேர்வு எழுத வைத்தேன்” : நீட் மோசடி கும்பல் தலைவன் அதிர்ச்சி வாக்குமூலம்!
இந்தியா முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் பல மாநிலங்களில் பல்வேறு மோசடிகள் நடந்தது கண்டறியப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற தேர்வின்போது ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பல் மருத்துவ மாணவி மற்றும் அவரது தாயாரை போலிஸார் கைது செய்தனர்.
அதேபோல் திரிபுராவைச் சேர்ந்த ஒரு மாணவனுக்காக, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவியையும் போலிஸார் கைது செய்தனர். இதற்காக அந்த மாணவிக்கு ரூ. 5 லட்சம் கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த ஆள்மாறாட்டம் குறித்து போலிஸார் விசாரணை செய்ததில், நன்கு படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஏழை மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பணத்தாசை காட்டி தேர்வு எழுத வைத்தது விசாரணை மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
இப்படி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைப்பதற்காகவே ஒரு கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. இந்த கும்பலின் தலைவனான பாட்னாவைச் சேர்ந்த பிரேம் குமார் என்பவரை வாரணாசி போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உத்தர பிரதேசத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்ட மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதவைத்துள்ளதை அறிந்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 25 மாணவர்களின் நீட் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என போலிஸார் தேசிய தேர்வு முகமைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?