India

"மோடி அரசால் கடுமையாக உயரப்போகும் உணவுப் பொருட்கள் விலை" : காரணம் என்ன?

இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வருகிறது. அதேபோல் வரலாறு காணாத வகையில் முதல்முறையாக டீசல் விலையும் 100 ரூபாயைத் தாண்டிவிட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வரும் அதேவேளையில் சிலிண்டர் விலையும் அதிரடியாக உயர்ந்து வருவது ஏழை, எளிய மக்களை மூச்சு விடமுடியாமல் திணறச் செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.710ஆக இருந்தது. பின்னர் பிப்ரவரி மாதத்தில் மூன்று முறை விலை உயர்த்தப்பட்டதால் 100 ரூபாய் கூடுதலாக விலை உயர்ந்தது. இதையடுத்து மார்ச் மாதத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது.

பின்னர் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களும் தலா மூன்று முறை ரூ.25 விலை உயர்ந்தது. இதனால் செப்டம்பர் மாதத்தில் சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.900.50க்கு உயர்ந்தது. இந்நிலையில் நவம்பர் மாதத்திற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விலை உயரவில்லை. ஆனால், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.268 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.2133க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலை அதிரடியாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Also Read: "355 விக்கெட் எடுத்த ஷமி எங்க.. ஒத்த ஓட்டு வாங்குன பா.ஜ.க எங்க" : மைதானத்தில் பதிலடி கொடுத்த ரசிகர்!