India
“கொரோனா தடுப்பூசி பதில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திய சுகாதார ஊழியர்கள்” : மகாராஷ்டிராவில் தொடரும் அவலம்!
இந்தியாவில் பரவிவரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மாநில முழுவதும் முழுவீச்சில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மக்களும் ஆர்வமுடன் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்கின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் கவனக்குறைவு காரணமாக கொரோனா தடுப்பூசிகளுக்குப் பதில் வேறு சில தடுப்பூசி மருந்துகள் செலுத்திய சம்பவங்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், தாணே நகராட்சிக்குட்பட்ட கல்வா பகுதியில் ஆட்கோனேஸ்வர் பகுதியில் சுகாதார மையம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் ராஜ்குமார் யாதவ் என்பவர் கொரோனா தடுப்பூசி செலுத்தச் சென்றுள்ளார்.
அப்போது அவர் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டார். பின்னர்தான் அந்த வரிசை நெறி நாய்க்கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் வரிசை என தெரிந்து ராஜ்குமார் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவரை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.
பின்னர், கவனக்குறைவாக கொரோனா தடுப்பூசிக்குப் பதில் ரேபிஸ் தடுப்பூசி போட்ட செவிலியரை சுகாதாரத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் மூன்று பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!