India
”கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” - மக்கள் விரோத சட்டத்தால் பாஜக அரசுக்கு தொடரும் நெருக்கடி!
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறையை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கிண்டி பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர், அனைத்து விவசாயிகள் மற்றும் தொழிற் சங்கத்தினர் என 200க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அரசுக்கு எதிராக, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கொடிகளை ஏந்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் சென்னை கிண்டியில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார் .
மேலும் ஒன்றிய அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீமாராவ் சமூக சமத்துவ சன்மார்க்க சங்கத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!