India
ஆந்திராவில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை வெளுத்தெடுத்த உறவினர்கள் !
ஆந்திர மாநிலம், ஒட்டிசெரு கிராமத்தில் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், தன்னிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொள்வதாகத் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளிக்குச் சென்று மாணவி கூறிய ஆசிரியரை திடீரென கடுமையாகத் தாக்கினர். அப்போது அவர்களிடம் அந்த ஆசிரியர் நான் மனைவியிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என முறையிட்டார்.
மேலும் மாணவியைச் சரியாகப் படிக்கவில்லை என்பதால் நான் அவரை கண்டித்தேன் என கூறினார். ஆனால், அவர்கள் அதைப்பற்றியும் கேட்காமல் ஆசிரியரைக் கடுமையாகத் தாக்கினர். அப்போது தடுக்க வந்த மற்ற ஆசிரியர்களையும் மாணவியின் உறவினர்கள் தாக்கினர்.
இந்த சம்பவத்ததால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வு குறித்து அறிந்த போலிஸார் பள்ளிக்கு வந்து இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். பிறகு மாணவியிடமும், ஆசிரியரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!
-
“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !