India
“அம்மா, அப்பா, தங்கை, பாட்டி என குடும்பத்தையே சுட்டுக் கொன்றது ஏன்?” - மாணவனால் அதிர்ச்சியடைந்த போலிஸார்!
ஹரியானா மாநிலம், ரோஹ்தக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் மாலிக். இவரது வீட்டில் கடந்த மாதம் 27ஆம் தேதி பிரதீப் மாலிக், மனைவி சந்தோஷ் பப்லி, மகள் நேகா, தாயார் ரோஷ்னி தேவி ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தனர்.
இந்த கொலை வழக்கு குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து பிரதீப் மாலிக்கின் மகன் அபிஷேக் மாலிக் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்தது. பின்னர் அவரிடம் போலிஸார் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.
அப்போது, தான் தனது தந்தை, தாய், சகோதரி, பாட்டியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாகக் கூறி போலிஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.
குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அபிஷேக் வெளியே தங்கிவந்துள்ளார். மேலும் இவருக்கும் தந்தைக்கும் தொழில் சம்பந்தமாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் அவர் அனைவரையும் சுட்டுக் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
கல்லூரி மாணவர் தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!