India
3வது அலை வருவதற்கு முன்பே 50% குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு : AIIMS இயக்குநர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பிறகு, படிப்படியாகக் குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 32,937 பேர் கொரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 417 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், கொரோனா வைரஸ் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமாகத் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும் பெங்களூருவில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் 50% குழந்தைகளுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை இப்போதைக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை. இருந்தாலும் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றவில்லை என்றால் மூன்றாவது அலை ஏற்படலாம்.
நாட்டில் மூன்றாவது அலை ஏற்பட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி இதுவரை செலுத்தப்படாமல் உள்ளது. அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்றில் 50% அதிகமான குழந்தைகள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!