India
"இறுதிச் சடங்கு செய்ய காசு இல்லை.." : தாத்தாவின் சடலத்தை ஃபிரிட்ஜில் வைத்த பேரன் - தெலங்கானாவில் அவலம்!
தெலங்கானா மாநிலம், பரக்காலா பகுதியைச் சேர்ந்தவர் பாலய்யா. இவரது பேரன் நிகில். இவர்கள் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இந்நிலையில், பாலய்யா வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு இது பற்றி தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பாலய்யா வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டிலிருந்த ஃபிரிட்ஜை போலிஸார் திறந்துபார்த்தபோது பாலய்யாவின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து பேரன் நிகிலிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பாலய்யா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாகவும், இறுதிச் சடங்கு செய்யப் பணம் இல்லாததால் அவரது உடலை ஃபிரிட்ஜில் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, போலிஸார் பாலய்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பேரன் நிகிலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ஓய்வு பெற்ற ஆசிரியரான பாலய்யா இறந்துவிட்டது தெரிந்தால் அவரது ஓய்வூதியத் தொகை நின்றுவிடும் என்பதற்காகப் பேரன் நிகில் இறந்ததை மறைத்தாரா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
இவ்வளவு வசதிகளா...நவீன நூலகத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: - முழு விவரம்!
-
அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்... துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
நிறைவேறியது கார்த்திகாவின் கனவு.. கண்ணகி நகரில் ரூ.75 லட்சத்தில் நவீன கபடி உள்விளையாட்டு அரங்கம் திறப்பு!
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதி செல்ல சூப்பர் 8-ல் இந்திய அணியின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? - முழு விவரம்!
-
தோழர் நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம்: முழு அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைப்போம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!