India

ஆதார் இணையதளத்தில் தொடர் கோளாறு : இதுதான் மோடி அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ சாதனையா ? - இணையவாசிகள் கேள்வி!

மோடி தலைமையிலான மத்திய அரசு தனிமனித அடையாளம் என கூறி ஆதாரை கொண்டுவந்து, அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கியது. அந்த வகையில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ற்போது வங்கிக் கணக்கு தொடங்க, அரசின் நலத்திட்ட சலுகைகள் பெற ஆதார் அட்டையில் முகவரி முக்கியமானதாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது, பள்ளி கல்லூரிகளில் சேர்க்கைக்கும் பான் கார்டு, செல்போன் எண், அரசு மானியங்கள் பெற, வருமான வரிக் கணக்கு இப்படிப் பல சேவைகளில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

இதனால் ஆதார் அட்டையில் உள்ள திருத்தங்களை மாற்ற விரும்பினால், UIDAI இன் அதிகாரப்பூர்வ தளமான https://uidai.gov.in -க்கு சென்று யார் வேண்டுமென்றாலும் அவர்களுக்கான சரியான ஆவணங்களைக் கட்டணம் செலுத்தி பதிவு செய்து முகவரி, பெயர் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம். இந்த நடைமுறை வந்தபிறகு பொதுமக்கள் தங்கள் ஆதார் கார்டுகளில் உள்ள திருத்தங்களை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சமீப காலமாக ஆதார் வெப்சைட் சர்வர் அடிக்கடி பழுதாகிறது. ஒரு முறை பழுதானால் அது சரியாக ஒரு வாரம் ஆகிவிடுகிறது. அப்படி கடந்த 10 நாட்களுக்கு முன் பழுதடைந்த ஆதார் வெப்சைட் சர்வர் இதுவரை சரிசெய்யப்படவில்லை.

அதனால், பொதுமக்கள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆதார் கார்டு திருத்தங்களை மேற்கொள்ள முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர். அதேபோல், புது கார்டு விண்ணப்பிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனல் மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் தோல்வி அடைந்துள்ளதா என்ன எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: லட்சம் கேட்ட வழக்கில் சிக்கிய அ.தி.மு.க நிர்வாகி : முக்கிய புள்ளிகளுடன் தொடர்பில் இருந்தது அம்பலம்!