India

“சொல்வது ஒன்று... செய்வது ஒன்று” : WiFi வசதி திட்டம் ரத்து - ரயில் பயணிகளை ஏமாற்றிய ஒன்றிய அரசு !

நாடு முழுவதும் ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் வை-பை வசதி திட்டத்துக்கான செலவு கூடுதலாக இருப்பதால் அதனை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய ரயில்வே அமைச்சர், தற்போது ரயில்களில் ‘வை-பை’ தொழில்நுட்பம் அடிப்படையிலான இணைய சேவைகளை அலைவரிசை கட்டண அடிப்படையில் பெற வேண்டியதுள்ளது.

இதில் மூலதன செலவு அதிகமாகிறது. இதனை அமல்படுத்தும் செலவும் குறையவில்லை. அத்துடன், பயணிகளுக்கு போதிய இணைய அலைவரிசை கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. எனவே, இந்த திட்டம் ரத்து செய்யப்படுகிறது. எனவே, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் அலைவரிசை மூலம் ஹவுரா-ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் வழங்கப்பட்ட இணைய சேவை ரத்து செய்யப்படுகிறது. எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “எமர்ஜென்சியை கண்ட இயக்கம் தி.மு.க.. சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம்” : அண்ணாமலைக்கு அமைச்சர் KN.நேரு பதிலடி!