India

'ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்வு' : ஆகஸ்ட் 1 முதல் அமல்!

இந்தியா முழுவதும் ஏ.டி.எம் இயந்திரங்களின் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுத்து வருகிறார்கள். இந்த பணப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் 2014ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியால் திருத்தி அமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரிசர்வ் வங்கி ஏ.டி.எம் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளது. இதன்படி கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம் இந்திரங்களில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 5 முறை கட்டணமின்றி பரிவர்த்தனை செய்யலாம்.

அதேபோல், 5 முறைக்கு மேல் எடுக்கப்படும் ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்குமான கட்டணம் 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதர வங்கிகளின் ஏ.டி.எம். இந்திரங்களில் மாதத்திற்கு 3 முறை கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம்.

பண பரிவர்த்தனை அல்லாத பிற சேவைக்கு ஏ.டி.எம் இயந்திரத்தை பயன்படுத்துவதற்கான கட்டணம் 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Also Read: உஷார்.. “வாட்ஸ்அப்பில் இப்படி ஒரு மெசேஜ் வந்தா நம்பாதீங்க” : மோசடி கும்பல் குறித்து போலிஸ் எச்சரிக்கை!