India
“விவசாயிகள் அல்ல குண்டர்கள்” : கடும் எதிர்ப்பால் 'மன்னிப்பு' கேட்ட ஒன்றிய பா.ஜ.க அமைச்சர்!
ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த விவசாயிகள் விரோத வேளாண் சட்டத்தை எதிர்த்து 250 நாட்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்தனர். இதன்படி நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது போலிஸாருக்கும், விவசாயிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து ஒன்றிய இணையமைச்சர் மீனாட்சி லேகி, “டெல்லியில் போராடும் அவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் குண்டர்கள். அவர்கள் செய்பவை குற்றச் செயல்கள். ஜனவரி 26 அன்று நடந்ததும் வெட்கக்கேடான குற்றவாளிகளின் நடவடிக்கைகள். ஆனால், எதிர்க்கட்சிகளோ இதுபோன்ற விவசாயிகளின் போராட்டத்தை ஊக்குவிக்கின்றன” எனக் கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து "ஒன்றிய இணையமைச்சர் இந்தியாவின் 80 கோடி விவசாயிகளையும் அவமானப்படுத்தியுள்ளார். நாங்கள் கொடூரர்களாக இருந்தால், மீனாட்சி லேகி விவசாய நிலங்களில் தயாராகும் உணவைச் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்" என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து தன் கருத்திலிருந்து ஒன்றிய இணையமைச்சர் மீனாட்சி லேகி பின்வாங்கியுள்ளார். "நான் குண்டர்கள் எனக் கூறியது விவசாயிகளை அல்ல. யாரையாவது காயப்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டு எனது வார்த்தைகளைத் திரும்பப் பெறுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!