India

“எங்களை விமர்சிச்சா செய்தி போடுறீங்க..?” : கொரோனா அவலங்களை வெளியிட்டதால் ஐ.டி ரெய்டை ஏவிய மோடி அரசு!

பிரபல பத்திரிகை குழுமமான டைனிக் பாஸ்கர் அலுவலகங்களிலும் அதன் உரிமையாளர் சுதிர் அகர்வாலின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

டைனிக் பாஸ்கர் பத்திரிகை குழுமம், இந்தி, குஜராத்தி, மராத்தி, ராஜஸ்தானி ஆகிய மொழிகளில் பத்திரிகைகளை நடத்தி வருகிறது. இதற்கு போபால், டெல்லி, இந்தூர், ஜெய்ப்பூர், ஆமதாபா, மும்பை உள்ளிட்ட இடங்களில் அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில், டைனிக் பாஸ்கர் பத்திரிகை அலுவலககங்களிலும் உரிமையாளர்கள் வீடுகளிலும் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

நூற்றுக்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளும் ஆயத்தீர்வை துறை அதிகாரிகளும் குழுக்களாகப் பிரிந்து சென்று எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனையைத் தொடங்கினர்.

டைனிக் பாஸ்கர் குழுமம் வருமான வரி ஏய்ப்பு செய்து வருவதாக தங்களுக்கு தகவல் வந்த காரணத்தினால் சோதனைகளை மேற்கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், கொரோனா இரண்டாம் பேரலையின்போது ஒன்றிய மோடி அரசின் செயல்பாடுகளை டைனிக் பாஸ்கர் குழுமப் பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சித்து வந்ததாலேயே அரசின் உத்தரவோடு இந்த சோதனை நடக்கிறது எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

“கொரோனாவால் பலியானவர்களின் உடல்கள் கங்கை நதியில் மிதந்தது குறித்து செய்திகளை வெளியிட்டு பா.ஜ.க அரசை அம்பலப்படுத்தியதன் காரணமாகவே எங்கள் மீது பா.ஜ.க அரசு ரெய்டு நடவடிக்கையை ஏவியுள்ளது” என டைனிக் பாஸ்கர் பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “பத்திரிகை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது ஆபத்தான போக்கு; கண்டனத்துக்குரியது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஜீன்ஸ் அணிந்ததற்காக பேத்தியை கொலை செய்த தாத்தா” - பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் கொடூரம்!