India
3வது அலையின் ஆரம்பகட்டத்தை எட்டியதா இந்தியா? புதிய சறுக்கல் மூலம் எச்சரிக்கை மணி அடிக்கும் கொரோனா!
உலகம் முழுவதும் 19 கோடி பேரை கொரோனா பெருந்தொற்று தாக்கியுள்ள நிலையில், மூன்றாவது அலை ஆரம்ப கட்டத்தை எட்டியதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போடும் வேகம் போதாது என்று யு.பி.எஸ். செக்யூரிட்டீஸ் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.
மரபணு வரிசை முறையை கண்காணித்து வரும் இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பான "இன்சாகாக்" வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் இதுவரை 230 வகையான கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த உருமாறிய தொற்றுகள் யாவும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பவை அல்ல. சில உருமாறிய தொற்றுகள்தான் ஆபத்தானவை என்று கூறியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக உருமாறிய வைரசின் இரண்டு வகை டெல்டா வைரஸ்கள் கண்டறியப்பட்டன. ஆனால், தற்போது “A.Y.-3” என்ற மற்றொரு உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்டா வைரசின் மூன்று வகைகளும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த 125 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்று நிதி ஆயோக் உறுப்பினர் மருத்து வர் வி.கே.பால் எச்சரித்துள்ளார். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதில் புதிய சறுக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இது ஒரு எச்சரிக்கை அறிகுறி என்றும் வி.கே.பால் குறிப்பிட்டுள்ளார்
Also Read
-
“தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!” : ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழ்நாடு அரசின் முடிவால் செவிலியர்கள் மகிழ்ச்சி!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
ரூ.165 கோடியில் கட்டப்பட்டு வரும் 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்! : உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
“நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும்!” : SIR குறித்து எச்சரித்த முரசொலி தலையங்கம்!
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!