India
“தமிழ்நாட்டின் நலன் மீது பா.ஜ.க தலைவர்களுக்கு அக்கறை இல்லை” : டி.ஆர்.பாலு எம்.பி சாடல்!
தடுப்பூசி ஒதுக்கீடு தொடர்பாக, தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இன்று டெல்லியில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்துப் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, “தமிழ்நாட்டுக்கு 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. ஜூலை மாதத்துக்கு 50 லட்சம் தடுப்பூசி தருவதாகக் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் தடுப்பூசித் தட்டுப்பாடு நிலவும்போது தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்கள் ஏன் ஒன்றிய அரசை வலியுறுத்தவில்லை? தமிழ்நாட்டின் நலன் மீது பா.ஜ.க தலைவர்களுக்கு அக்கறை இல்லை.
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தொடங்கத் தயாராக உள்ளோம். மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசின் கதவைத் தட்ட வேண்டியுள்ளது. 90% தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும் 10% தடுப்பூசிகளைத் தனியாருக்கும் வழங்க வேண்டும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கையில் வெளிப்படைத் தன்மையில்லை. ரேசன் கடையில் அரிசி வாங்குவது போல ஒன்றிய அரசிடம் தடுப்பூசி வாங்கும் நிலை உள்ளது. ரூ.20,000 கோடிக்கு நாடாளுமன்ற புதிய வளாகம் காட்டும் ஒன்றிய அரசு, அந்தப் பணத்தை தடுப்பூசிக்கு செலவிடலாம்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !
-
கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல்: நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் படுகொலை - பதைபதைக்கும் தூத்துக்குடி!
-
அரசின் அனுமதி வாங்கி தருவதாக பண மோசடி.. தவெக பிரமுகர் அதிரடி கைது!
-
“லிஃப்ட்” தருவதாக கூறி 40 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... திருவள்ளூரில் நடந்த பகீர் சம்பவம்!