India

“கும்பமேளா தவறில் இருந்து பாடம் கற்கவில்லையா?” : உத்தரகாண்ட் பா.ஜ.க அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகம் எடுத்த நேரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கும்பமேளா திருவிழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டர்.

இந்தியா முழுவதும் கொரோனா பரவலுக்கு இந்த விழாவும் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில், உத்தரகாண்ட் அரசு சார் தாம் யாத்திரை நிகழ்வை முன்னட்டு பத்ரிநாத், கேதார்நாத் புனித தளங்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.

இதனால் இப்பகுதியில் கூட்டமாக சுற்றித்திரியும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை அடிப்படையாக கொண்டு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில், “கும்பமேளாவில் செய்த அதே தவறை சார் தாம் யாத்திரையிலும் அரசு செய்வது தவறானது.

மேலும் இது கண்டிக்க கூடிய செயலாகும். மேலும், கொரோனா பாதிப்புகளை பார்த்து உத்தரகாண்ட் ஏன் பாடம் கற்றுக்கொள்ளவில்லை? உத்தரகாண்ட் அரசு நீதிமன்றத்தை முட்டாள் ஆக்கலாம், ஆனால் மக்களை முட்டாளாக முடியாது” என நீதிபதிகள் கண்டம் தெரிவித்துள்ளனர்.

Also Read: பெருந்தொற்றிலும் பெட்ரோல் விலையை தினந்தோறும் உயர்த்தி குளிர்காயும் மோடி அரசு - கையறு நிலையில் மக்கள்!