India
இருப்பதை தாரை வார்த்துவிட்டு, வெளியில் இருந்து பெற்றதற்கு மார் தட்டிக்கொள்ளும் மோடி அரசு - ராகுல் சாடல்!
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவும் என நிபுணர்கள் எச்சரித்தும் அலட்சியமாக செயல்பட்ட மத்திய மோடி அரசு, ஆக்சிஜன், ரெம்டெசிவர், தடுப்பூசி என அனைத்தையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டியதால் தற்போது சொந்த நாட்டு மக்களை கைவிட்டிருக்கிறது.
Also Read: “இத்தனை உயிரிழப்புக்கும் மோடி அரசே முழுமுதற் காரணம்” - பிரபல மருத்துவ இதழ் கடும் விமர்சனம்!
அதன் காரணமாக நாட்டில் நாள்தோறும் ஆக்சிஜன், மருந்துகள் கிடைக்காமல் மக்கள் உயிரிழந்து வருவது அண்மைக்காலமாக தொடர்கதையாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
மோடி அரசின் இந்த மெத்தனத்தையும், அலட்சிய போக்கையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து விமர்சித்துள்ளார்.
அதில், வெளி நாடுகளில் இருந்து பெறப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏதோ தன் முனைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது போன்று மத்திய மோடி அரசு மார்தட்டிக் கொள்வது வேதனை அளிக்கிறது என்றும், தன்னுடைய கடமைகளையும், பணிகளையும் மத்திய அரசு உரிய வகையில் செய்திருந்தார் இந்தியாவுக்கு இந்த இக்கட்டான நிலை வந்திருக்குமா? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!