India

“முதலாளிகளுக்கு கிடைத்த பொக்கிஷம் பிரதமர் மோடி”: விருது வழங்கும் விழாவில் உண்மையைச் சொன்ன முகேஷ் அம்பானி!

பிரதமர் மோடி தலைமலையிலான பா.ஜ.க அரசு அமைத்ததில் இருந்து முதலாளிக்கு ஆதரவாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிசலுகை உள்ளிட்ட பல்வேறு வகையில் சாதமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கொரோனா காலத்தில் வறுமையில் தவித்த மக்களுக்கு உதவி செய்ய முன்வராத இந்த மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகையை அறிவித்தது.

இந்நிலையில் மோடி ஆட்சியில், இந்தியாவையும் பார்க்கும்த போது தனியார் நிறுவனத்தின் தொழில்முனைவோர்களுக்கு சுனாமி போல ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டுக்கான தொழில் முனைவோர் விருது வழங்கும் விழா காணொளி முறையில் நடைபெற்றது.

இதில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலைவரும், இந்தியாவின் ‘நம்பர்ஒன்’பணக்காரருமான முகேஷ் அம்பானி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ பொருளாதாரம், ஜனநாயகம், கலாச்சாரம், டிஜிட்டல் மற்றும் தொழில்நுடபச் சக்தி ஆகியவற்றில் உலக அளவில் இந்தியா வளர்ந்து வருகிறது.

வரும் பத்தாண்டுகளில் உலக அளவில் முதல் மூன்று பொருளாதார சக்தியாக வருவதற்கான பலம் இந்தியாவுக்கு உள்ளது. நான் இன்றைய இந்தியாவையும், நாளைய இந்தியாவையும் பார்க்கும் போது தொழில்முனைவோர்களுக்கு சுனாமி போல ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

என்னுடைய நம்பிக்கைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி. அவர், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்காக தனியார் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழகம் முழுவதும் அ.தி.மு.க வேட்பாளர்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் : கதி கலங்கும் எடப்பாடி பழனிச்சாமி!