India
மிரட்டும் கொரோனா... அச்சத்தில் மக்கள் : தடுப்பு நடவடிக்கை எடுப்பதில் மோடி அரசு தயக்கம் காட்டுவது ஏன்!
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நீடித்து வரும் கொரோனா தொற்று பரவல் கடந்த மாதம் வரை தணிந்து காணப்பட்டது. தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களை மீண்டும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அவ்வகையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக 64 ஆயிரத்து 258 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,19,08,10 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதைப் போல் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 291 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,61,240 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் பதிவாகி வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 50 சதவீதம் தெற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 36 ஆயிரத்து 902 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கை முதல்வர்உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். அதேபோல் பஞ்சாப்,கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!