India

“மோடிக்கு மண்டையில் பிரச்சனை” : பரப்புரையின்போது உண்மையை உடைத்த மம்தா!

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதற்கு பதிலடியாக தேர்தல் பரப்புரையில் வெளுத்து வாங்கி வருகிறார் மம்தா.

சமீபத்தில் தேர்தல் பரப்புரையாற்றிய மம்தா, “பிரதமர் மோடியைப் போன்ற ஒரு பொய்யரை நான் பார்த்ததில்லை. அவர் பொய்களை மட்டுமே பேசுகிறார். இன்று, பா.ஜ.க அரசின் கொடுமை காரணமாக, உ.பி.யில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் வேலையை விட்டு வெளியேறுகின்றனர். மேற்கு வங்க கலாச்சாரத்தை அழிக்க பா.ஜ.க உ.பி-யிலிருந்து குண்டர்களை அழைத்து வருகிறது.” என விமர்சித்தார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து திரிணாமுல் காங். தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய மம்தா பானர்ஜி, “நாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது. பிரதமர் மோடியின் தாடி மட்டுமே வளர்கிறது. பிரதமர் மோடி தன்னை சில நேரங்களில் சுவாமி விவேகானந்தர் எனக் கூறிக் கொள்கிறார்.

சில நேரங்களில் மைதானங்களுக்கு தனது பெயரையே வைக்கிறார். அவரது மூளையில் ஏதோ பிரச்சனை உள்ளது. அவரது ஸ்க்ரூ லூஸாகிவிட்டது போலத் தெரிகிறது” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Also Read: "பாஜகவுடன் கூட்டணி அமைத்தும் அவர்களின் லட்சியம் நிறைவேறவிடாமல் கட்டுப்படுத்தியது தி.மு.க”- ஆ.ராசா பேச்சு!