India
“கடந்த 5 ஆண்டுகளில் 340 தூய்மை பணியாளர்கள் மலக்குழியில் சிக்கி பலி” : தூய்மை இந்தியா திட்டத்தின் சாதனையா?
நாடு அபார வளர்ச்சி அடைந்து வரும் இந்த சூழலிலும் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் இன்னும் தொடர்கிறது. குறிப்பாக, மனித கழிவுகளை மனிதனே அள்ள தடை செய்யப்பட்டும்கூட இன்னும் தூய்மைப் பணியாளர்கள் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த கொடுமையால் ஆண்டுதோறும் பல தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள் தொழிலாளிகள் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவுநீர் தொட்டிகளை தூய்மை பணிசெய்யும்போது, அதில் இருந்து வெளியாகும் விஷவாயு தாக்கி மரணம் அடைவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு 1993ம் ஆண்டு முதல் மனிதக் கழிவை மனிதனே அகற்றும் பணியில் ஈடுபட்டதால் 801 தூய்மைப் பணியாளர்கள் இறந்துள்ளதாக மனிதக் கழிவை அகற்றும் தொழிலாளர்களுக்கான தேசிய துப்புரவு தொழிலாளர் ஆணைய தகவலை வெளியிட்டது.
இந்நிலையில், இந்தியாவில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 340 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் அளித்த அறிக்கையில், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது அதிக உயிரிழப்பு நடந்த மாநிலங்களில் உத்தர பிரதேசம் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது.
குறிப்பாக, 2020 டிசம்பர் 31 வரையிலான 340 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில், 52 பேர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அதற்கு அடுத்தப்படியாக, தமிழ்நாட்டில் 43 பேர் உயிரிழந்ததுள்ளனர். டெல்லியில் 36 பேரும், மகாராஷ்டிராவில் 34 பேரும் அதேப்போல் பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் 31 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இது குறித்து சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், “சமீபத்தில் கூட சென்னையில் பிரபல மாலில் விஷவாயு தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். தூய்மைப் பணியாளர் மரணம் என்பது இனியும் நிகழக் கூடாது” என ஒவ்வொரு முறையும் இதுபோல மரணம் நிகழும் போது சொல்லிவிட்டு கடந்துப்போகிறோம்.
சமூக நீதிக்கும், மனித நேயத்துக்கும் சிறந்த மாநிலமாக இருக்கும் தமிழகம் தூய்மை பணியாளர்களின் இறப்பில் இரண்டாம் இடம் பிடித்திருப்பது அ.தி.மு.க அரசின் அவலநிலைக் காட்டுகிறது” என சமூக ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!