India

பிரச்னை எங்களுக்கும் அரசுக்கும்தான்.. நேரடி பேச்சுவார்த்தையையே விரும்புகிறோம் - விவசாயிகள் திட்டவட்டம்!

சட்டங்களை முழுமையாகத் திரும்பப்பெற வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என விவசாயிகள் திட்டவட்டம் கூறியுள்ளனர்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில் சட்டங்களை செயல்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தால் அந்த உத்தரவை மட்டுமே வரவேற்பதாக விவசாயிகள் தரப்பில் கூறியுள்ளனர்.

Also Read: வேளாண் சட்டங்களை இதுகாறும் நிறுத்திவைக்காதது ஏன்? - மோடி அரசை விளாசிய உச்சநீதிமன்றம்!

சட்டங்களை முழுமையாகத் திரும்ப பெற வேண்டும் என்பதே தங்களுடைய நிலைப்பாடு, கோரிக்கை என்று விவசாய சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் குழு அமைத்தால் அந்த குழு முன்பாக சென்று பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.

பிரச்சனை விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையேதான். ஆகவே மத்திய அரசிடம் நேரடி பேச்சுவார்த்தை என்ற நிலையிலிருந்து எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சட்டங்களை திரும்பப் பெற இயலாது என்று நேற்று மாலை உச்ச நீதிமன்றத்தில் ஒரு கூடுதல் பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் கடும் விமர்சனத்திற்குப் பிறகும் வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நன்மைக்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே சட்டங்களுக்கு தடை விதிக்கக் கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வேளாண் வழக்கில் உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் கூடும்போது, சட்டங்களுக்கு இடைக்காலத் தடைவிதிக்கக் கூடாது என்று மீண்டும் மத்திய அரசு வாதிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read: FARM LAWS-ஐ நிறைவேற்ற கருத்துகள் கேட்கப்பட்டதா? எந்த தகவலும் இல்லையென கைவிரித்த மோடி அரசு - RTIல் அம்பலம்