India
“வணிக சிலிண்டர்களின் விலையை ரூ.56 வரை உயர்த்திய மோடி அரசு” : பொதுமக்கள் கடும் பாதிப்பு!
வீடுகளில் சமைப்பதற்கு ஆரோக்கியமான முறையில் எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு 30 ஆண்டுகளுக்கும் மேலாக எல்.பி.ஜி சமையல் எரிவாயுவை மானிய விலையில் வழங்கி வந்தது.
இந்தநிலையில் மோடி ஆட்சிக்கு வந்ததும் மானிய விலை திட்டத்தை “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY)" என்று புதிய பெயர் சூட்டி, புதிய திட்டம் போல் செயல்படுத்தினார். மேலும் ஏழைகளுக்கு எரிவாயு இணைப்பு இலவசம் என்று கூறினார். ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மானிய விலையில் எல்.பி.ஜி சமையல் எரிவாயு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் வழக்கம்போல சொல்வது ஒன்றும், செய்வதும் ஒன்றுமாக ஆளும் பா.ஜ.க அரசு ஒவ்வொரு மாதமும் மானியம் இல்லாத சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை மாற்றி அடிக்கடி உயர்த்தியது.
அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டர்களின் விலையை மட்டும் ரூ.56 வரை மோடி அரசு உயர்த்தியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அதே நிலையில் தான் உள்ளது.
குறிப்பாக, ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களை தொடர்ந்து இந்த மாதமும் மானியமில்லா சிலிண்டர் விலை மாற்றம் இன்றி 594ஆக தொடர்கிறது. ஆனால், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களைத் தொடர்ந்து வணிக சிலிண்டர்கள் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
இதையடுத்து சென்னையில், 19 கிலோ எல்.பி.ஜி கேஸ் சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .1,354.50 லிருந்து ரூ .1,410.50 ஆக உயர்ந்துள்ளது. சிலிண்டருக்கு விலை ரூ.56 அதிகரித்துள்ளது. மேலும் 14.2 கிலோ LPG சிலிண்டரின் விலை ரூ.610 ஆக உள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் ரூபாய் 55 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!