India
50% இடஒதுக்கீடு அரசாணை வழக்கு : தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை!
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு படிப்புகளில் சேர்வதற்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு அதனை அரசாணையாக வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சில மருத்துவ மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. கேவியட் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். அப்போது தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!