India
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 45,903 பேருக்கு கொரோனா தொற்று - 490 பேர் பலி : கொரோனா நிலவரம் ! #COVID19
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 45,903 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85,53,657 ஆக உயர்ந்திருக்கிறது.
ஒரே நாளில் 490 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,26,611 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 48,405 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 79,17,373 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 5,09,673 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 92.56% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.48% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.96% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 8,53,401 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 11,85,72,192 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!