India

கலால் வரியை மீண்டும் உயர்த்த திட்டம் : அரசின் வருமானத்துக்கு மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு..!

மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்த வேளையில், கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டு வரும் ஊரடங்காலும் தற்போது கடுமையான பாதிப்பை நாட்டின் பொருளாதாரம் சந்தித்து வருகிறது.

இந்த சரிவுகளை சீரமைக்க மத்திய அரசு சார்பில் கூடுதல் சிறப்பு நிதி சலுகைகள் அறிவிக்கப்பட்டது. அந்த கூடுதல் நிதிகளுக்காக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருந்த போதும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் மீதான விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது. இதனால் விலைவாசி உயர்ந்து சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

modi

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 முதல் 6 ரூபாய் வரை உயர்த்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் ஆண்டுக்கு 30 முதல் 60 ஆயிரம் கோடி வரை கூடுதல் வருவாய் திரட்ட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே காய்கறிகள் மற்றும் மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலைகள் அதிகரித்து வரும் வேளையில் தற்போது கலால் வரி உயர்வால் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயர்ந்து கடுமையான பாதிப்புகளை மக்கள் சந்திக்கும் அவலத்திற்கு வித்திட்டுள்ளது.

Also Read: மோடி அரசின் வேளாண் சட்டத்தின் விளைவு: வெங்காயத்தைத் தொடர்ந்து அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை உயர்வு!