India
மோடி அரசின் வேளாண் சட்டத்தின் விளைவு: வெங்காயத்தைத் தொடர்ந்து அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை உயர்வு!
மத்திய மோடி அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் நிறைவேற்றியது. இதன் விளைவாக தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் போன்றவை அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என கணிக்கப்பட்டது.
கணிப்பின்படி, தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வெங்காயம் கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில், தற்போது 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதனிடையே, வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை எதிரொலி காரணமாக மளிகைப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதில், தனியா 68 ரூபாய் என விற்கப்பட்டு வந்த நிலையில், 90 ரூபாய் என உயர்ந்துள்ளது.
அதேப்போல், பருப்பு அனைத்தும் 40 சதவீதம் வரை உயர்ந்து உள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வரும் கொண்டக்கடலை வரத்து குறைந்துள்ளதால் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும். மேலும், கடுகு மிளகு தனியா உள்ளிட்ட பொருட்கள் பருப்பு வகைகள் முக்கியமான மளிகை பொருட்கள் அனைத்தும் தற்போது 40 சதவீத விலை உயர்ந்துள்ளது.
அதேப்போல், டீத்தூள் 40 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், பண்டிகை காலங்களில் இன்னும் அதிக அளவில் விலை உயர்வு ஏற்படும் தெரியவந்துள்ளது.
இது, தட்டுப்பாடு காரணமாக வெளியிடங்களில் இருந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைவு, விளைச்சல் குறைவு மற்றும் விலை உயர்வை கடுப்படுத்த அரசு எடுக்காத நடவடிக்கைகள் போன்ற காரணங்களினால் மளிகை பொருட்களின் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மோடி அரசாங்கம் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு இன்றளவும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் இந்த சட்டத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரிக்கும் என எச்சரித்தனர்.
ஆனால், மோடி அரசின் ஆதரவாளர்கள், எதிர்க்கட்சிகள் போராட்டம் அரசியல் லாபத்திற்காக நடத்துவதாக குற்றம் சாட்டினார்கள். ஆனால் தற்போது, எதிர்க்கட்சிகளின் எச்சரிக்கை படியே, அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
விலைவாசி உயராது என பொய் பிரச்சாரம் கூறிய பா.ஜ.க ஆதரவாளர்கள் மக்கள் முன்பு அம்பலமாகியுள்ளார்கள் என சமூக ஆர்வலர்கள் விமர்த்து வருகின்றனர்.
Also Read
-
”விடுபட்டவர்களுக்கும் ரூ.1,000 கிடைக்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
-
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, ‘உலக புத்தொழில் மாநாடு 2025’! : எங்கு? எப்போது?
-
பஞ்சாப் மழை வெள்ளம்! : 3.87 லட்சம் பேர் பாதிப்பு - உயிரிழப்பு 51ஆக உயர்வு!
-
”பா.ஜ.கவின் பொருளாதாரச் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது” : வெளுத்து வாங்கிய முரசொலி!
-
தமிழ்நாட்டில் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை : போட்டி அட்டவணையை வெளியிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி!