India

புதிய தளர்வுகள் ஏதுமில்லை... கொரோனா ஊரடங்கு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு! #Unlock 6.0

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதியிலிருந்து முதல் 40 நாள்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

அதன்பிறகு, அதன் தொடர்ச்சியாக மாதாமாதம் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனவே தற்போது பெரும்பாலான செயல்பாடுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மெட்ரோ ரயில் சேவை, மால்கள் உள்ளிட்டவை கடந்த மாதம் முதலே கட்டுப்பாடுகளுடன் செயல்பாட்டு வருகிறது. இன்னும் 3 தினங்களில் இந்த மாதத்திற்கான ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் தற்போது unlock 6.0வின் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊரடங்கு அறிவிப்பில், செப்டம்பர் 30-ம் தேதி அறிவிக்கப்பட்ட தளர்வுகள் அப்படியே நவம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் இந்தமுறை புதிய தளர்வுகள் ஏதும் கிடையாது என்றும் அன்லாக் 6.0 தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Also Read: “கொரோனா பாதிப்பு குறைவதாக கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிடக் கூடாது” - மத்திய அரசு எச்சரிக்கை!