India
மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு : பஞ்சாப் மாநில பா.ஜ.க-வின் பொதுச் செயலாளர் பதவி விலகல் !
நாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி மத்திய மோடி அரசாங்கம் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம் இந்திய விவசாயத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக இருப்பதாகவும், அந்த சட்டங்களை நிறைவேற்ற வேண்டாம் என பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள பஞ்சாப் விவசாயிகளால் அம்மாநிலமே போராட்டக்களமாக மாறியுள்ளது. மேலும், பா.ஜ.க அரசிற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், அம்மாநில பா.ஜ.க நிர்வாகிகள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.க அரசுக்கு எதிராக போர் கொடித் தூக்கியுள்ளனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் மாநிலத்தின் முக்கிய பா.ஜ.க நிர்வாகிகள் கலந்துக்கொண்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பஞ்சாப் மாநில பா.ஜ.கவின் பொதுச்செயலாளர் மால்விந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பா.ஜ.கவின் மத்திய நிர்வாகியாவும், பஞ்சாப் மாநில பா.ஜ.க.வின் பொதுச்செயலாளருமாக இருந்து வந்த மால்விந்தர் சிங், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, மால்விந்தர் சிங் எழுதியுள்ள ராஜினாமா கடித்ததில், “விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள் குறித்து பல முறை எதிர்த்தும், எச்சரிக்கையும் விடுத்துவிட்டேன். ஆனால், அதற்கு உரிய மதிப்பும், பதில்களும் கிடைக்காத நிலையில், விவசாயிகளுக்காக தான் வகித்து வந்த கட்சியின் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தவறிய பா.ஜ.க தலைமைக்கு எதிராக பஞ்சாப் மாநில பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்வது, பா.ஜ.கவுக்குப் பெரும் பின்னடை தற்போது ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!