India

மொரோடோரியம் வழக்கு: கூட்டு வட்டியில்லை என்ற மத்திய அரசு சுற்றறிக்கை வெளியிடாதது ஏன்? - உச்ச நீதிமன்றம்

வங்கிக்கடன் தவணைக்கான அவகாச மாதங்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் குறித்து ஒரு வாரத்தில் விரிவான பதிலளிக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் நேற்று முன்தினம் பதிலளித்த மத்திய அரசு, 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு மட்டும் கூட்டு வட்டி வசூலிப்பதை கைவிட ரிசர்வ் வங்கியுடன் நடத்திய ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனு தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகள் விடுபட்டுள்ளன. பல முக்கிய பிரச்சினைகளுக்கு அரசு பதிலளிக்கவில்லை.

2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு மட்டும் கூட்டு வட்டியைத் தள்ளுபடி செய்வதாக கூறிருந்தாலும் அது தொடர்பாக சுற்றறிக்கை என எதனையும் வெளியிடவில்லை என்று வாதிட்டனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு, ஆர்.பி.ஐ மற்றும் வங்கிகள் இது தொடர்பாக கூடுதல் பதிலை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வட்டி விலக்கு தொடர்பாக வங்கிகள் வெளியிட உள்ள சுற்றறிக்கை மற்றும் ஆணைகள் தொடர்பாகவும் பதிலளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Also Read: “EMI அவகாச காலத்தில் ரூ.2 கோடி வரையிலான கடன் வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டியதில்லை”: மத்திய அரசு தகவல்!