India
மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க தலைமையில் போராட்டம்!
விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் இதற்கு துணைபோன ஆளும் அ.தி.மு.க அரசைக் கண்த்தும் இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து, மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தாமல் - குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில் ‘சர்வாதிகார’மாக நடந்துள்ள மத்திய பாஜக அரசைக் கண்டித்து சென்னையில் செப்டம்பர் 21 திங்களன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தோழமைக்கட்சிகள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரானதும் - வேளாண்மை முன்னேற்றத்திற்குப் பின்னடைவைத் தரக்கூடியதும் - கூட்டாட்சித் தத்துவத்திற்குப் புறம்பானதுமான மூன்று சட்டங்களுக்கும், தமிழக அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
செப்டம்பர் 28 அன்று காலை 10 மணி அளவில் மாவட்டத் தலைநகரங்களிலும் நகராட்சி மற்றும் ஒன்றியங்களிலும் “கொரோனா” பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலம், மசோதா சட்டமாவதை தடுப்பதற்கு இருந்த ஒரே வாய்ப்பும் பறிபோனதால் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !