India
பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பதை நியாயப்படுத்தி பேசிய SBI தலைவர் - கொந்தளித்த வங்கி ஊழியர்கள்!
கொரோனா ஊரடங்கு காலத்திலும் பா.ஜ.க அரசு முக்கிய துறைகள் தனியார்மயமாகி வரும் நிலையில், தற்போது ஒருசில பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்.
குறிப்பாக, தற்போது 12 பொதுத்துறை வங்கிகள் இருக்கும் நிலையில் அந்த எண்ணிக்கையை மேலும் குறைத்து 5 வங்கிகளாக்க மத்திய பா.ஜ.க அரசு முடிவுசெய்துள்ளது. மேலும், பொதுத்துறை வங்கிகளின் பெருமளவு பங்குகளை தனியாருக்கு விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க அரசின் தனியார்மயக் கொள்கை, நாட்டையே பின்னுக்குத் தள்ளும் எனவும், கார்ப்பரேட்களுக்காகவே தனியார்மய முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகளும், பொருளாதார வல்லுநர்களும் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், பொதுத்துறை வங்கியை தனியார்மயத்தை நியாயப்படுத்தி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(எஸ்.பி.ஐ) வங்கியின் தலைவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், பிஸினஸ் லைன் பத்திரிக்கைக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர் ரஜனீஷ் குமார் பேட்டி ஒன்றை அளித்தார். அந்த பேட்டியில், “பொதுத்துறை வங்கிகள் சிலவற்றை தனியார் மயப்படுத்துவது, வங்கித்துறைக்கோ அல்லது நாட்டின் பொருளாதாரத்திற்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
எந்த ஒரு நிறுவனமும் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது தான் வலியுறுத்தப்பட வேண்டுமேயன்றி, யாரால் நிர்வகிக்கப்படுகிறது என்பது வலியுறுத்தப்பட வேண்டியதில்லை” எனத் தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்துக்கு தற்போது கடும் கண்டனம் எழுந்துள்ளது.
மேலும், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வன்மையாக கண்டித்துள்ளது. இதுதொடர்பாக, ந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசத்தின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியின் தலைவர், பொதுத்துறை வங்கி களை தனியார்மயப் படுத்துவதை வலியுறுத்தி, ஆதரவாக வெளியிட்டுள்ள கருத்துகள் ஏற்புடையதல்ல.
நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதில், எஸ்.பி.ஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பையும், மோசமான நஷ்டத்தில் திவாலாகிச் சரிந்த பல தனியார் வங்கிகள், பொது மக்களின் சேமிப்பை பாதுகாப்பதற்காக, பொதுத்துறை வங்கிகளோடு இணைக்கப்பட்ட வரலாறுகளையும் எஸ்பிஐ தலைவர் நன்கு அறிவார். எனவே, பத்திரிக்கை செய்திகளில் இடம்பெற்றுள்ள ரஜனீஷ் குமார் தன் கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!