India
32 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு: ஒரே மாதத்தில் 15 லட்சம் பேருக்கு தொற்று.. அன்லாக் 4 தேவைதானா?
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் 32 லட்சத்து 34 ஆயிரத்து 475 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதில், 24 லட்சத்து 67 ஆயிரத்து 758 பேர் குணமடைந்திருந்தாலும் 59 ஆயிரத்து 449 பேர் கொரொனா தொற்றால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் வேதனையை அளித்துள்ளது. மேலும், சிகிச்சையில் மட்டுமே 7 லட்சத்து 7,267 பேர் உள்ளனர்.
இப்படி இருக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 67 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, ஒரே நாளில் 63 ஆயிரத்து 173 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆயினும் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 59 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக நகரங்களை விட கிராமப்பகுதிகளிலேயே இந்த மாதத்தில் கூடுதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாதிப்பு அதிகமாக உள்ள 584 மாவட்டங்களில் பெரும்பான்மையும் உள்மாவட்டங்கள் என்று தெரியவந்துள்ளது. இதில் 345 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கிறது.
இதனிடையே புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய அன்லாக் 4 அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது. பள்ளி, கல்லூரிகள் தவிர்த்து மற்ற துறைகளில் கூடுதல் தளர்வுகளை அனுமதிக்க மத்திய உள்துறை ஆலோசனைகளை நடத்திவருகிறது.
Also Read
-
பள்ளிக்கரணை சதுப்புநிலம் - கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
“சென்னையில் இதுவரை 5.38 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
பயிர்க்காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க அமைச்சர் MRK உத்தரவு!
-
உரத் தேவையை பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை தேவை! : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
S.I.R - மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பா.ஜ.க : தேர்தல் ஆணையம் என்ன 'சிட்டி ரோபா'வா - முரசொலி தாக்கு!