India
புதிய கல்விக் கொள்கையால் கிராமப்புற இளைஞர்கள் ராணுவத்தில் இணைவார்கள் : முப்படைத் தளபதியின் மோசமான பேச்சு!
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கையின் பெரும்பான்மையான திட்டங்கள் இந்தி - சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் விதமாகவும், ஏழை எளிய மாணவர்களிடமிருந்து கல்வியைப் பறிக்கும் விதமாகவும் இருப்பதாக எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க மற்றும் அதன் கூட்டனி கட்சிகளின் வலியுறுத்தலின் பெயரில் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையில் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றான மும்மொழித்திட்டத்தை தமிழகத்தில் கொண்டுவரமாட்டோம் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் புதிய கல்விக் கொள்கையினை முற்றிலும் புறக்கணிக்கவேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசின் கொள்கை ஆதரித்து ராணுவ உயர்பொறுப்பில் உள்ளவர்கள் விதிகளுக்கு மாறாக தொடர்ந்து பேசிவருவது வாடிக்கையாகிவிட்டது.
அந்த வகையில், புதிய கல்விக் கொள்கையானது, கிராமப்புற இளைஞர்களை அதிகளவில் ராணுவத்திற்கு கொண்டு வருவதற்கு உதவும் என்று முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராணுவ அகாடமியில் பேசுகளையில், “அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையானது (NEP-2020), நாட்டில் கற்றல் செயல் முறையை மாற்றும். கல்லூரி மட் டத்தில் பல்வேறு நிலை உள்நுழைவு மற்றும் வெளியேறும் திட்டங்கள் நமது இளைஞர்களுக்கு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கும்.
ஆசிரியர்கள் இந்த மாற்றத்திற்கு தயாராக வேண்டும், முன்னணியில் இருந்து அவர்கள் தான் வழிநடத்த வேண்டும். இது, இராணுவத்தின் ஆயுதப்படை பிரிவு சிப்பாயாக, கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களை அடையாளம் காண உதவும்.” என்று கூறியுள்ளார்.
தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையால் கிராமப்புற மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடிப்பதே கேள்விக்குறி ஆகியுள்ளது. இதனால், பலரும் தொழிற்கல்வி படிக்கவோ, அதற்கு ஏற்ற வேலையோ கிடைக்காது; இதனால் அவர்களில் ஒருபகுதியினர் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் ராணுவ பணிகளுக்கு திரும்புவார்கள் என்பதையே சூசகமாக பிபின் ராவத் வெளிப்படுத்தியுள்ளரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?
-
VBGRAMG சட்டம் ஒழிக! : ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
-
“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!