India
ராமர் கோவில் பூஜை : தனிப்பட்ட மத அமைப்பின் விழாவில் பிரதமர் கலந்துகொள்வது சரியா? - த.மு.எ.க.ச கேள்வி!
மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கும் அரசியல் சாசனத்தின் பெயரால் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் உள்ளிட்ட எவரொருவரும் தனிப்பட்ட ஓர் அமைப்பின் மதச்சார்பு நடவடிக்கையான ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கெடுக்க வேண்டம் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாநில பொறுப்பு தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் த.மு.எ.க.ச சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “பரவலான விமர்சனங்களை எதிர்கொண்ட ஒரு தீர்ப்பின்மூலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் வழிகோலிவிட்டது. எனினும் அங்கிருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதை சட்ட விரோதம், குற்றச்செயல் என்றும் அத்தீர்ப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில் அங்கு 2020 ஆகஸ்ட் 5 அன்று கோவிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடக்கவுள்ளது. இந்த நிகழ்வில் உத்திரபிரதேச அரசிலும் மத்திய அரசிலும் தலைமைப்பொறுப்பில் உள்ள பிரதமர் உள்ளிட்ட பலரும் பங்கெடுக்க இருப்பதாக வரும் செய்தி கவலையளிக்கிறது.
தனிப்பட்ட ஓர் அறக்கட்டளையால் நடத்தப்படும் இந்நிகழ்வில் அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள இவர்கள் பங்கெடுப்பதானது, அரசியல் சாசனத்தின் மாண்புகளுக்குப் புறம்பானதாகிவிடும் எனக் கருதுகிறது தமுஎகச. மத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தை குடிமக்களுக்கு வழங்கும் நமது அரசியல் சாசனம், அரசானது எந்தவொரு மதத்தையும் சாராமல் இருக்கவேண்டும் எனப் பணிக்கிறது.
இவ்வாறு மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கும் அரசியல் சாசனத்தின் பெயரால் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் உள்ளிட்ட எவரொருவரும் தனிப்பட்ட ஓர் அமைப்பின் மதச்சார்பு நடவடிக்கையான ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கெடுக்க வேண்டாமென தமுஎகச கேட்டுக்கொள்கிறது.” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
Asian Para Games 2026 : ஒரே நாளில் அடுத்தடுத்து.. பதக்கங்களை அள்ளி குவித்த துளசிமதி முருகேசன்!
-
தலைகீழாக நடந்த SIR பணி மூலம் தேர்தல் முறை சீர்குலைந்துள்ளது! : அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக கண்டனம்!
-
“தமிழ்நாட்டில் பள்ளிகள் சாதிவெறிக் களமாவதைத் தடுக்க வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
வெற்றிப் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை ஏன் மறுதலிக்கிறீர்கள்? இதற்கு பெயர் பாகுபாடு : தீபக்நாதன்!
-
கல்லுரி மாணவிக்கு பாலியல் சீண்டல் : த.வெ.க நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை!