India

பண மதிப்பிழப்பின் போது கோடிக்கணக்கில் மோசடி செய்து போலிஸில் சிக்கியவருக்கு தமிழக பா.ஜ.க இளைஞர் அணி பதவி!

பிரதமர் மோடி கடந்த கால ஆட்சியின் போது 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய்நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார்.

தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள பெரும்பாலான கட்சிகள் அந்த அறிவிப்பை ஆதரித்தன. சந்தேகமிருந்த சில பேரும் கூட ஆதரிக்கிறோம், ஆனாலும் சிரமம் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அதேநேரத்தில், மோடியின் அறிவிப்பை கண்டித்ததோடு இதனால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது,மாறாக ஏழை, எளிய நடுத்தர மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாவார்கள் என ஜனநாயக அமைப்பினர் அரசியில் கட்சியினர் என பலர் குரல் கொடுத்தனர்.

அப்போது ஏற்பட்ட பாதிப்பில் இருந்து ஏழை, அடித்தட்டு மக்கள் மற்றும் சிறு - குறு தொழில் செய்வோர் என அனைவரும் மீளமுடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை முன்கூட்டியே தெரிந்து மோசடி வேலையிலும் பா.ஜ.கவினர் அப்போது ஈடுபடத்துவங்கினர்.

அந்த வகையில், பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு 900 புதிய .2000 ரூபாய் நோட்டுகள் உட்பட ரூ.20.5 லட்சம் ரொக்கத்துடன் இருந்த பா.ஜ.க இளைஞர் பிரிவு தலைவரை தமிழக போலிஸார் கைது செய்தனர். அப்படி கைது செய்யப்பட்ட நபருக்கு பா.ஜ.க மாநில அளவிலான முக்கிய பதவியை வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜே.வி.ஆர் அருண். இவர் பா.ஜ.க-வின் மாவட்ட இளைஞர் பிரிவு செயலாளராக இருந்து வந்தார். பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு சேலம் அருகே ஒரு வழக்கமான சோதனையில் போலிஸார் ஈடுப்பட்டனர்.

அந்த சோதனையின் போது, அருணின் வாகனத்தை சோதனை செய்த போது அவரின் காரில் இருந்து ரூ .20.5 லட்சம் மதிப்புள்ள பல மூட்டைகளை போலிஸார் மீட்டனர். அந்த மூட்டையில் 926 புதிய 2000 ரூபாய் நோட்டுகளும், 1,530 எண்ணிக்கையிலான 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் 1000 என கைப்பற்றப்பட்டது.

மேலும் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக முறையான ஆதாரம் எதுவும் சமர்பிக்கப்பட்டாததல் காவல்துறையினர் அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர். அதன் பிறகு வருமான வரித்துறை விசாரணையில் இறங்கின.

இதுகுறித்து விளக்கமளிக்கக் கோரி பாஜகவின் மாநிலப் பிரிவு அருணுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதுகுறித்து பேசிய கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இளைஞர் செயலாளர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து கட்சி பணிகள் பலவற்றில் அருண் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் இதுபோல குற்ற செயலில் ஈடுபட்ட அருண் என்பவருக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பதவியில் இருந்து மாநில பா.ஜ.க இளைஞரணி செயலாளர் பதவிக் கொடுத்துள்ளார். இது பலரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாது குற்ற செயலில் ஈடுபட்டவருக்குதான் பதவி உயர்வு என்ற புதிய விதிமுறைகளை பா.ஜ.கவினர் மட்டுமே தொடர்ச்சியாக பின் பற்றி வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read: “கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2,000 கோடி ஊழல்” - பா.ஜ.க அரசை குற்றம்சாட்டும் சித்தராமையா!