India

“நீட் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு” - நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரமடைவதால் மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நீட், ஜே.இ.இ தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, ஜூலை 26ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என தி.மு.க உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகளும், மாணவர்களும், பெற்றோரும் வலியுறுத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி குரல்கள் எழுந்ததையடுத்து, தேர்வுகளை நடத்துவதற்கான நிலைமையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

இந்நிலையில், இக்குழு தனது அறிக்கையை சமர்பித்தது. அதன்படி இன்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜே.இ.இ முதன்மை தேர்வு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6ம் தேதி வரை நடைபெறும் என்றும், ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதிநடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “கொரோனா பேரிடர் காலத்தில் ‘நீட்’ தேர்வை நடத்தக் கூடாது” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!