India

“பலவீனமான தலைமை நாட்டையே சீர்குலைக்கும் என்பதற்கு உதாரணம்” - ராகுல் காந்தி விளாசல்!

இந்தியா மற்றும் அமெரிக்க மக்களின் டி.என்.ஏ-வில் இருந்த சகிப்புத்தன்மை மாயமாகிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று உலகையே சூழ்ந்துள்ள நிலையில், அதன் தாக்கம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி-யுமான ராகுல்காந்தி பல்வேறு துறை அறிஞர்களிடம் காணொளிக் காட்சி வழியாக கலந்துரையாடி வருகிறார்.

அந்த வரிசையில், முன்னாள் அமெரிக்க தூதரும், ஹார்வர்டு ஜான் எப் கென்னடி பல்கலைக்கழக பேராசிரியருமான நிக்கோலஸ் பர்ன்ஸ் உடன் காணொளிக் காட்சி மூலம் உரையாடினார் ராகுல் காந்தி.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “நமது சகிப்புத்தன்மை கூறுகளால், இந்தியா, அமெரிக்கா இடையிலான நட்பு சிறப்பாக உள்ளது. நமது டி.என்.ஏ-விலேயே சகிப்புத்தன்மை உள்ளது.

நாம் திறந்த மனதுடன் இருப்போம். ஆனால், ஆச்சர்யமாக தற்போது டி.என்.ஏவில் உள்ள சகிப்புத்தன்மை மாயமாகியுள்ளது. இதுபோன்ற சூழலை நான் அமெரிக்காவிலும் பார்த்தது இல்லை. இந்தியாவிலும் பார்த்தது இல்லை.

ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுக்கும் ஒரு அரசாங்கம் எங்களிடம் உள்ளது. அது ஒரு கடினமான ஊரடங்கை விதிக்க முடிவு செய்தது. அதன் விளைவை அனைவரும் பார்க்க முடிந்தது. ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர். இதுபோன்ற பலவீனமான தலைமை நாட்டையே சீர்குலைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு : இன்று மட்டும் 1,982 பேருக்கு தொற்று... 18 பேர் பலி! #Corona