India
“நேற்று ஒரேநாளில் 9,887 பேருக்கு கொரோனா பாதிப்பு” : நோய்த்தொற்று அதிகரிக்க ஊரடங்கு தளர்வு காரணமா?
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 6,698,370 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 393,142 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இந்த மூன்றரை மாதங்களில் பாதிப்பு 2,36,657ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 294 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து கடந்த 11 நாட்களாக உயிரிழப்பு நூற்றுக்கு மேல் பதிவாகிவருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 6,642 ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் 1,14,072 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு மிக குறைவான எண்ணிக்கையில் இருப்பது சற்றே ஆறுதலாக இருந்தாலும் கடந்த மூன்ற நாட்களாகவே தொடர்ந்து ஆறாயிரத்துக்கு மேலானோர் பாதிப்பு தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 80,229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2,849 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 35,156 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் 28,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 232 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15,762 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஊரடங்கைத் தளர்த்தியதே நோய்த் தொற்று அதிகரிக்க காரணம் என மருத்துவ வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!