India
நிதி அமைச்சரின் 3வது கட்ட அறிவிப்பு : விவசாயிகள், மீனவர்களுக்கு உடனடி பலனற்ற ‘ஏமாற்றம்’ தரும் திட்டங்கள்!
பிரதமர் மோடி கடந்த 12-ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து, பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான ‘சுயசார்பு பாரதம்’ என்ற பெயரிலான திட்ட அறிவிப்புகளை பல கட்டங்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.
அதன்படி மூன்றாவது கட்டமாக இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததாவது :
“இந்தியா பால் உற்பத்தி, விவசாய உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. மீன்வளங்களில் இரண்டாவது பெரியது மற்றும் தானியங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது இந்தியா.
இந்திய விவசாயிகள் உண்மையிலேயே சகிப்புத்தன்மையுள்ளவர்கள். அவர்கள் எங்களுக்கு அதிக மகசூல் தருவார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, சில உலகளாவிய வரையறைகளை எட்டிய இந்திய விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் புதிய 11 அம்சத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாய உற்பத்தியில் உள்கட்டமைப்பு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1 லட்சம் கோடி விவசாய உள்கட்டமைப்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயத் துறையில் தொழில்முனைவோர் மற்றும் தொடக்க நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளின் கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நன்மை கிடைக்கும்.
ஊட்டச்சத்து பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 2 லட்சம் மைக்ரோ நிதி நிறுவனங்கள் பயனடையும் வகையில் ரூ.10,000 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க 74,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கடல் உற்பத்திக்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதில் உள்நாட்டு மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு போன்ற செயல்களுக்காக ரூ.11,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூபாய் 9,000 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள், கிடங்குகள், மீன்களுக்கான குளிர்பதன நிலையங்கள் மற்றும் சந்தைகள் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் எதுவும் உடனடியாக விவசாயிகள், மீனவர்களுக்கு பயன்படுவதாக இல்லை. எல்லா அறிவிப்புகளுமே நீண்டகால திட்ட அறிவிப்புகாளாகத்தான் இருக்கிறது. பட்ஜெட் அறிவிப்புகள் போல் அறிவித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனோவால் பொருளாதாரத்தை இழந்து நிற்கும் அவர்களுக்கு அடுத்த சில மாதங்களில் பயன்படும் விதமான அறிவிப்புகள் எதுவே இல்லை என்று விவசாயத் துறை நிபுணர்களும், எதிர்க்கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன.
பல கோடி ரூபாய் அறிவிப்புகள் என்கிற பெயரில் மத்திய அரசு மாயாஜால வித்தை காட்டுகிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!