India
“கங்கை நீர் கொரோனாவை குணப்படுத்துமாம்” : ஆராய்ச்சி செய்யச் சொன்ன மோடி அரசு - நிராகரித்த ICMR!
கொரோனா பாதிப்பு காரணமாக நாடுமுழுவதும் 3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைத் தடுக்க இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் வேளையில், மோடி அரசு கங்காஜல்-நீரை ஆராய்ச்சி செய்து கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க வைத்த கோரிக்கையை அவ்வமைப்பு நிராகரித்துள்ளது.
கங்காஜல் என்றழைப்படும் இந்த நீர், கங்கை நதிக்கரையை ஒட்டிய கங்கோத்ரியில் இருந்தும், பிரபல புனித ஸ்தலமான ரிஷிகேஷில் இருந்தும் சேகரிக்கப்படுகிறது. இந்த கங்காஜல் நீரை அத்துல்யா கங்கா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முன்மொழிவு குறித்து “முழுமையான ஆராய்ச்சி”-க்கு உட்படுத்துமாறு ஜல் சக்தி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்து கடிதம் ஒன்றைக் கொடுத்துள்ளது.
அந்தக் கடித்ததில், கோவிட் -19 ஐ குணப்படுத்தக்கூடிய பாக்டீரியோபேஜ் எனப்படும் ‘நிஞ்ஜா வைரஸ்’ கங்கையின் நீரில் இருப்பதை அத்துல்யா கங்கா மேற்கோள் காட்டியுள்ளது. பாக்டீரியோபேஜ் ஒரு சிறப்பு வகை வைரஸ் ஆகும், இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை சாப்பிடுகிறது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் கோவிட் -19 என்ற வைரஸையும் கொன்றுவிடும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
அந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ஜல் சக்தி அதைப் படிக்க வேண்டும் என்றும், ஐ.சி.எம்.ஆர் ‘முழுமையான ஆராய்ச்சி’ செய்யுமாறும் கோரியுள்ளது. ஆனால் அந்த கோரிக்கையைத் தற்போது ஏற்கமுடியாது என்றும், தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவற்காக மருத்துவ ஆராய்ச்சி நடைபெறுவதால் அதனைத் தொடர முடியாதென ஐ.சி.எம்.ஆர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கங்கை நீர் மாசடைந்து குடிக்கமுடியாத நிலையில் இருந்த நீர் தற்போதுதான் குடிக்க உகந்ததாகவே மாறியுள்ளது. உண்மை நிலவரம் இப்படி இருக்கையில், மக்களை திசைதிருப்ப இதுபோல பொய்யான தகவலை அரசின் மூலமே செய்யவைப்பது பெரும் வேதனைக்குரியதாக இருப்பதாக சுகாதாரத்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!