India

“இன்று இரவு இதுதான் கிரகங்களின் நிலை” : வாட்ஸ் அப் வதந்தி பரப்பிய மதுவந்தி கைது செய்யப்படுவாரா ?

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு தற்போது வரை பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே மூன்று முறை உரையாற்றியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் மக்களிடையே உரையாற்றிய மோடி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மாறாக மருத்துவ உபகரணமின்றி, கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைபணியாளர்களுக்கு கைதட்டி நன்றி செலுத்துங்கள் என அறிவித்தார். அதனையடுத்து நாடே இருளில் உள்ளது.

கொரோனாவை விரட்ட ஒளியேற்றுவோம் எனக் கூறி, வீட்டில் இல்லாதவர்கள் செல்போன் டார்ச் லைட் மூலமும், வீட்டில் உள்ளவர்கள் அகல்விளக்கு மூலமும் ஒளியேற்றுங்கள் என அறிவியலுக்கும் புறம்பான ஒரு செயலை செய்ய சொல்லியிருக்கிறார் இந்திய பிரதமர்.

மோடியின் இந்த அறிவிப்பு நாட்டுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல மோடி எதை அறிவித்தாலும் அதில் உலக விஞ்ஞானம் ஒழிந்துள்ளது. முன்னோர்களின் மந்திரம் உள்ளது தந்திரம் உள்ளது என ஏகபோகமாக கதைகளை வாரி வழங்கிவருகின்றனர் இந்த மோடியின் விசுவாசிகள்.

அவரின் இந்த அறிவிப்பை ஆதரித்து சில அதிமேதாவிகள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு மோடியின் புத்திசாலிசனத்தை உலக மக்களுக்கு புரியவைக்க முயல்கின்றனர். ஆனால் அவர்கள் சொல்லும் விசயம் முழுவதும் பொய் என்பதே தற்போது நிரூபணமாகியுள்ளது.

மோடியின் அறிவிப்பை ஆதரித்து, நடிகர் ஒய்.ஜி.மஹேந்திரனின் மகளும், லதா ரஜினிகாந்த்தின் சகோதரியின் மகளும் ஆன மதுவந்தி அருண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மோடி அறிவிப்பினால் இந்நாட்டிற்கு ஒரு புதுசக்தி உருவாகும். இதனை அஸ்ட்ராலஜிஸ்ட் உறுதிப்படுத்தியுள்ளனர்.

9 நிமிடம் விளக்கை ஏற்றும்போது 9 கிரங்களும் ஒரே நேர்கோட்டில் வருவதாக அஸ்ட்ராலஜிஸ்ட் சொல்கிறார்கள் என பேசியுள்ளார். “நம்ப பிரதமர் காரணமில்லாமல் செய்ய மாட்டார்” என புகழ்ந்து தள்ளியுள்ளார். இவரின் இந்த பேச்சுக்கள் முழுக்கமுழுக்க ஆதராமற்றது என்று சமூக விஞ்ஞானிகள், மற்றும் அறியியல் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவர் கூறுவது போல இன்று 9 மணிக்கு கிரகங்கள் எதுவும் ஒரே நேர்கோட்டிற்கு வரப்போவதில்லை. அது தன்னுடைய பாதையிலேயேதான் இருக்கும் என கூறுகின்றனர். மக்களை முட்டாளாக்கும் பிரதமரின் முயற்சிக்கு இவர்கள் போன்றோர்கள் ஊதுகுழலாக செயல்படுவது வேதனை அளிப்பதாக சில அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பொய்யான தகவலை பரப்பும் இவரை காவல்துறை கைது செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Also Read: விபரீதம் புரியாமல் விளக்கை அணைக்கச் சொன்ன மோடி: இந்தியாவே இருளில் மூழ்கும் அபாயம் !