India
“பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாயாக உயர்த்திய மோடி அரசு”-கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், ரஷ்யாவின் போட்டி காரணமாக சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க அதிகாரம் கொடுத்த மோடி அரசு, கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியின்போது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை.
குறிப்பாக, மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் மட்டுமன்றி கொரோனா பாதிப்பு என அனைத்துத் துறைகளும் முடங்கி போயுள்ளன.
இந்நிலையில், பொதுமக்களை நேரடியாக தாக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மக்கள், வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்களும் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இது போதாதென்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ 8 வரையும், டீசல் மீதான கலால் வரி 4 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டதாக அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும். மோடி அரசின் இத்தகைய நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Also Read
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மனிதாபிமானமற்று செயல்படும் பா.ஜ.க அரசு : பெண் மருத்துவர் மரணம் - ராகுல் காந்தி விமர்சனம்!